The andhra
ஆஸி.,யில் சதமடித்த நிதிஷ் ரெட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஆந்திரா கிரிக்கெட் சங்கம்!
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Related Cricket News on The andhra
-
SMAT 2024: ஆந்திராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது உத்தர பிரதேச அணி!
ஆந்திர அணிக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உத்தர பிரதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; மும்பை அசத்தல் வெற்றி!
ஆந்திரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹனுமா விஹாரி வீரர்களை மிரட்டியதாக புகர்; ஆந்திரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை!
ஹனுமா விஹாரி தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக வீரர்கள் புகாரளித்துள்ளார்கள் என்று ஆந்திரா கிரிக்கெட் சங்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: அபிஷேக், ரிக்கி பூய் அபாரம்; வலிமையான நிலையில் ஆந்திரா!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர மிடிவில் ஆந்திர பிரதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24