ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர்.

Advertisement

இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து  முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி 4 ரன்களிலும், அரைசதம் கடந்து அசத்திய பென் டக்கெட் 9 பவுண்டரிகளுடன் 62 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் 28 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9அவது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.

இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஒல்லி போப் 100 ரன்களுடனும், ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் ஒல்லி போப் 14 பவுண்டரிகளுடன் 106 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 20 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த ஹாரி புரூக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

அவருடன் இணைந்த ஜேமி ஸ்மித்தும் ரன்களைக் குவிக்க அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதன் மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஹாரி புரூக் 57 ரன்களுடனும், ஜேமி ஸ்மித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 144 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News