கபா டெஸ்ட்: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரு அணிகளிலும் மாற்றம் நிகழ வாய்ப்பு!

Updated: Wed, Dec 11 2024 11:34 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

மேலும் இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த அணி தற்சமயம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வியிலும் மாட்டியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது உறுதியாகியுள்ளது. 

இந்திய அணி

இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் கபா டெஸ்டின் போது பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அடிலெய்டு டெஸ்டின் போது அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அவர் பேட்டிங்கில் 29 ரன்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் இப்போட்டியிக்  அஸ்வினுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் அல்லது ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ்தீப்/வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால் மாற்றங்களைச் செய்ய விரும்பாது என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர்களின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள காரணத்தால், ஸ்காட் போலண்டிற்கு பதிலாக அவர் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலிய உத்தேச லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்/ஜோஷ் ஹேசில்வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை