கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!

Updated: Tue, Dec 31 2024 12:59 IST
Image Source: Google

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு கனவு அணியை உருவாக்கி வெளியீடும். அதனை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் வீரர்களைக் கொண்ட டெஸ்ட் அணியை உருவாக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. 

அந்தவகையில் நடப்பு 2024ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டின் சிறந்த அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்திய அணியைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸால், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடம் வழங்கியுள்ளது. அத்துடன் நடப்பு ஆண்டில் அபாரமாக செயல்பட்டுள்ள ஜஸ்பிரித் பும்ராவை இந்த அணிக்கு கேப்டனாகவும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ள நடப்பு ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோரும், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் மேட் ஹென்றி ஆகியோருக்கும், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹெசில்வுட் ஆகியோரும்,  இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் கேசவ் மஹாராஜ் ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

2024ஆம் ஆண்டி சிறந்த டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், ஜோ ரூட், ரச்சின் ரவீந்திரா, ஹாரி புரூக், கமிந்து மெண்டிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மேட் ஹென்றி, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், கேசவ் மஹாராஜ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை