அஸ்வினுக்கு சிறப்பு பரிசை வழங்கிய லையன், கம்மின்ஸ்!

Updated: Thu, Dec 19 2024 10:46 IST
Image Source: Google

இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அந்தவகையில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த கையோடு அஸ்வினின் இந்த அறிவிப்பும் வெளியானது. 

இதனையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. மெற்கொண்டு இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் இரு வரிசையாக நின்று அஸ்வினுக்கு கார்ட் ஆஃப் ஹானர் மரியாதயையும் செலுத்தினர். இந்நிலையில் போட்டி முடிந்ததும், ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய அணி கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினர்.

இந்நிலையில் அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து பேசிய லையன், "அஷ்வின் மீது மரியாதை மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளாக அஷ்வின் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும்  அவரது திறமை வியக்க வைக்கிறது. சில விஷயங்களில் எங்களுக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம், ஆனால் அதில் சரியோ தவறோ இல்லை. நான் அவருடன் உரையாடியுள்ளேன். எதிர்காலத்திலும் இன்னும் அதிகம் உரையாடுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் நாதன் லையன், பாட் கம்மின்ஸ் இருவரும் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.  அஸ்வினின் டெஸ்ட் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், அவர் 106 டெஸ்ட் போட்டிகளில் 24.01 சராசரியில் 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் 37 முறை 5 விக்கெட்டுகளையும், 8 முறை 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

அதேசமயம் பேட்டிங்கில், ​​அவர் 151 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 25.76 சராசரியுடன் 3503 ரன்கள் எடுத்துள்ளார். இதில் டெஸ்டில் 6 சதங்களும் 14 அரை சதங்களும் அடித்துள்ளார். அவரது ஒருநாள் கிரிக்கெட்டை பற்றி பேசுகையில், 116 போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், 707 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில்,  65 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 19 இன்னிங்ஸ்களில் 184 ரன்களை தனது கணக்கில் சேர்த்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

38 வயதான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் தொடர்ந்து டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் எதிர்வரும் ஐபிஎல்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 211 போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 800 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை