India vs England 1st Test Day 1: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சதமடித்ததன் மூலம் சுனில் கவாஸ்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரது சதத்தின் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது.

Advertisement

இந்திய அணி தரப்பில் கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். 

ஜாம்பவான்களின் பட்டியலில் இடம்

அந்தவகையில் இந்திய டெஸ்ட் வரலாற்றில் கேப்டனாக அறிமுகமான முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். முன்னதாக, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதில் விஜய் ஹசாரே மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இங்கிலாந்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

இளம் கேப்டன்

Advertisement

இதுதவிர்த்து கேப்டன் பதவியில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இளம் இந்திய கேப்டன் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ஷுப்மன் கில் 25 வயது மற்றும் 285 நாட்களில் சாதமடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது தவிர, இங்கிலாந்து அணிக்கு எதிராக செயல்பட்ட இளம் இந்திய கேப்டன் எனும் பெருமையையும் ஷுப்மன் கில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்கள்

Also Read: LIVE Cricket Score

Advertisement

மேற்கொண்டு இப்போட்டியில் ஷுப்மன் கில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகமான ஷுப்மன் கில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 60 இன்னிங்ஸ்களில் விளையாடி 2ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதில் 6 சதங்களும் 7 அரைசதங்களும் அடங்கும். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News