Joe Root Records: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் கருண் நாயரின் கேட்சைப் பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Advertisement

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், கருண் நாயர் 40 ரன்னிலும், ஷுப்மன் கில் 16 ரன்னிலும் விக்கெட்டை இழக்க இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்தின் ஜோ ரூட் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் கருண் நாயரின் கேட்சை ஜோ ரூட் பிடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக ராகுல் டிராவிட் 210 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது ஜோ ரூட் 211 கேட்சுகளை பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர்கள்

  • 211* - ஜோ ரூட்
  • 210 - ராகுல் டிராவிட்
  • 205 - மஹேல ஜயவர்தன
  • 200 - ஸ்டீவ் ஸ்மித்
  • 200 - ஜாக் காலிஸ்
  • 196 - ரிக்கி பாண்டிங்

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர். 

Also Read: LIVE Cricket Score
Advertisement

இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.    

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News