இந்தியா அணி வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரண்டும் முடிவடைந்து இருக்கின்றன. டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி டிராவாக ஒரு போட்டியை வென்றும், ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியை தோற்று இரண்டு போட்டியில் வென்றும், இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.

Advertisement

இதற்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7 மணிக்கு தொடங்கவுள்ளது. நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடினார்கள்.

Advertisement

அப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்யாமல் பந்து வீசி வெஸ்ட் இண்டீஸை 114 ரன்கள் சுருட்டிய காரணத்தால், இளம் வீரர்களை பரிசோதிக்கும் வாய்ப்பு வீணானது. இதன் காரணமாக இரண்டாவது  மற்றும் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி அணியில் சேர்க்கப்படவில்லை. இரண்டாவது போட்டியில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடி தொடரையும் கைப்பற்றியது.

இந்த ஒருநாள் தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடக்க வீரராக களம் இறங்கி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் அடித்தார். மேலும் மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய கில் 85 ரன்கள் எடுத்தார். தொடர் முழுவதும் குல்தீப் யாதவ் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது.

இந்த தொடரின் முடிவுக்கு பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய வீரர்கள் இருந்த இடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள். அதேவேளையில் இஷான் கிஷான் முன்னேறி இருக்கிறார். மேலும் ஷுப்மன் கில் அவருடைய இடத்தில் தொடர்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 8ஆவது இடத்தில் இருந்து 9ஆவது இடத்திற்கும், 10ஆவது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா 11ஆவது இடத்திற்கும் சரிந்திருக்கிறார்கள். மேலும் இசான் கிஷான் 15 இடங்கள் முன்னேறி 45 ஆவது இடத்தில் நீடிக்கிறார். மூன்று ஆட்டங்களில் 7 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் 14ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஷுப்மன் கில் 7ஆவது இடத்தில் இருக்கிறார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News