இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை விளையாடி முடித்துள்ளது. இதே நம்பிக்கையுடன் அடுத்ததாக பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு தயாராகி வருகின்றனர். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் பிப்ரவரி 9ஆம் நாக்பூர் மைதானத்தில் தொடங்கி மார்ச் 13ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நிறைவடையவுள்ளது.

Advertisement

நியூசிலாந்து தொடருக்கு பின்னர் பணிச்சுமை காரணமாக ஓய்வில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு கம்பேக் தந்துள்ளனர். மேலும் காயம் காரணமாக இடம்பிடிக்காமல் இருந்த வந்த ரவீந்திர ஜடேஜாவும் தனது உடற்தகுதியை நிரூபித்து அணியில் இடம்பிடித்தார்.

Advertisement

ஆனால் நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள ஜஸ்பிரித் பும்ராவின் நிலைமை தான் என்ன ஆனது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்தனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தின் போது முதுகில் ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பல்வேறு முக்கிய தொடர்களை தவறவிட்டார். கடந்த இலங்கை தொடரில் கம்பேக் தருகிறார் என அறிவிக்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் மீண்டும் முதுகுவலி பிரச்சினை எனக்கூறி வெளியேறினார். 

ஆஸ்திரேலியாவுடனான போலவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவரின் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் பும்ராவின் கம்பேக் குறித்து புது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதுகு வலியால் இத்தனை நாட்களாக உடற்பயிற்சிகளை மட்டுமே செய்துக்கொண்டிருந்த அவர், தற்போது பந்துவீச தொடங்கிவிட்டார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர வலைபயிற்சியை செய்துள்ளார். அப்போது அவருக்கு எந்தவொரு சிரமும் ஏற்படவில்லை எனக்கூறப்பட்டுள்ளது.

இதனால் 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் தான் உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. எனவே இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருப்பதால் அதற்குள் ஜஸ்பிரித் பும்ரா நன்றாக தயாரகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, முழு ஃபார்முடன் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News