டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு - ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Mon, Apr 29 2024 15:27 IST
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு - ரசிகர்கள் மகிழ்ச்ச (Image Source: Google)

இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இந்திய அணியின் ஒருசில இடங்கள் உறுதியான நிலையில், அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கான பதிலை ரசிகர்கள் தேடிவருகின்றனார். ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான் போன்ற வீரர்களும் அதிரடி காட்டிவருகின்றனர். 

இதனால் அணியின் விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கும் பெரும் சிக்கலாக அமைந்தது. ஒரு கட்டத்தில் ரிஷப் பந்தின் இடம் நிச்சயம் என்ற தகவல் வெளியான நிலையில், இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தற்சமயம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேபோல், அணியின் முதல் நான்கு இடங்களில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்கள் இடத்தை உறுதிசெய்துள்லதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெலியான தகவலின் படி, “வரவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் தேர்வாளர்களுக்கு முதல் தேர்வாக இருக்கலாம். ஏனெனில், டாப் ஆர்டரில் சுழற்பந்து வீச்சை ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் இந்திய அணிக்கு தேவை.

அதேப்போல் ரிஷப் பந்த் தனது உடற்தகுதி மற்றும் தனது ஃபார்மை தேர்வாளர்களிடம் நிரூபித்துள்ளார், இதன் காரணமாக அவரும் டி 20 உலகக் கோப்பை அணியிலும் ஒரு அங்கமாக இருக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், விக்கெட் கீப்பர்களுக்கான போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோரும் உள்ளனர், ஆனால் கேஎல் ராகுல் ஐபிஎல்லில் தொடர்ந்து டாப் ஆர்டரில் பேட்டிங் செய்து வருகிறார், இதனால் அவரது தேர்வு சற்று கடினமாகிவிட்டது.  

ஏனெனில் தற்போது இந்திய டி20 அணியில் பல சிறந்த டாப் ஆர்டர் வீரர்கள் உள்ளனர். அதேசமயம் ஜிதேஷ் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதளவில் சோபிக்க தவறியுள்ளார். இதன் காரணமாக அவர் விக்கெட் கீப்பர்களுக்கான போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையடியுள்ள சஞ்சு சாம்சன், 77 சரசரி மற்றும் 161 ஸ்டிரைரேட்டுடன் 385 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 4 அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை