சிராஜின் மைண்ட் கேமில் விக்கெட்டை இழந்த லபுஷாக்னே; வைரலாகும் காணொளி!

Updated: Sun, Dec 15 2024 09:10 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது சிராஜ் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே இடையேயான போட்டியானது நாளுக்கு நாள் ஆக்‌ஷோரமாக மாறி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இருந்தே இருவாரும் களத்தில் மோதிக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

அந்தவகையில், தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் சிராஜ் மற்றும் லபுஷாக்னேவின் மோதலானது தொடர்ந்தது. அதன்படி இப்போட்டியின் 33ஆவது ஓவரை சிராஜ் வீசிய நிலையில் அதனை லபுஷாக்னே எதிர்கொண்டார். அப்போது முகமது சிராஜ் மைண்ட் கேம்களை விளையாடி லாபுஷாக்னேவை பயமுறுத்த முயன்றார்.

அந்த ஓவரின் இரண்டாவது பந்தை வீசிய பிறகு, சிராஜ் நேராக ஸ்ட்ரைக்கரின் முனைக்குச் சென்று ஸ்டம்புகளின் மேல் வைக்கப்பட்டிருந்த பையில்களை மாற்றினார். இதைப் பார்த்த லாபுஷாக்னேவும் சிராஜ் அந்த இடத்தை விட்டு சென்றது பைல்களை மீண்டும் மாற்றினார். இச்சம்பவத்தை கண்ட ரசிகர்களும் சிரிப்பலையில் அழ்ந்தனர். ஆனால் இறுதியில் சிராஜின் இந்த மைன்ட் கேமில் லபுஷாக்னே சிக்கிக் கொண்டார்.

ஏனெனில் அடுத்த ஓவரிலேயே நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் மார்னஸ் லபுஷாக்னே ஸ்லிப்பில் நின்றிருந்த விரட் கோலியிடம் கேட்ச் கொடுத்து த்ந்து விக்கெட்டை இழந்தார். இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே 11 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் சிராஜ் மற்றும் லபுஷாக்னே இருவரும் பைல்ஸை மாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.

Also Read: Funding To Save Test Cricket

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ்தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை