டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலியும் ஒருவர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பாராட்டிவுள்ளார்.

இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களின் இடங்களை யார் நிரப்புவார், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார், இத்தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலியும் ஒருவர் என்று பாராட்டிவுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பெரிய ஷூக்களை நிரப்பக்கூடிய ஒரு ஆழமான திறமைக் குழுவை இந்தியா கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆண்டர்சன், “அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள். ரோஹித் ஓய்வு பெற்றதால் புதிய கேப்டன் வருவார். கோலி, இதுவரை இருந்த சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர். நிறைய திறமைகள் உள்ளன, ஆனால் அவர்கள் அணியில் ஏராளமான திறமைகள் உள்ளன. நீங்கள் ஐபிஎல்லைப் பார்க்க வேண்டும். அவர்கள் இப்போது ஐபிஎல்லில் இருந்து தாக்குதல், ஆக்ரோஷம் மற்றும் அச்சமற்ற வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கொண்டு வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார். அதேசமயம் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகாளில் விளையாடி 12 சதம், 18 அரைசதங்கள் என 4301 ரன்களையும் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now