
தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை இருக்கிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. 20 அணிகளும் இதற்கான முன்கூட்டியே தயாரிப்புகளில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வரை டி20 உலகக்கோப்பைக்கு எப்படியான இந்திய அணி அனுப்பப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மிக முக்கியமாக மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெறுவார்களா என்பதுதான் பெரிய கேள்வி.
இந்த நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான அணி அறிவிப்பில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களே தங்களுக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓய்வு தேவை என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு இளம் அணியை ஒரு உலகக் கோப்பைக்கு அனுப்பி வைக்க எந்த கிரிக்கெட் வாரியமும் விரும்பாது. ஆனால் தற்பொழுது வாய்ப்பு பெற்று விளையாடக்கூடிய எல்லோருமே இளம் வீரர்களாகவே இருக்கிறார்கள்.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் கூறுகையில், “ரோஹித், விராட் கோலி விஷயம் ஏன் விவாதம் ஆகிறது என்று எனக்கு தெரியவில்லை. சமூக ஊடகங்கள் கிரிக்கெட் திறன்களை கேள்விக்கு உள்ளாக்கலாம். டி20 உலக கோப்பைக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு அணியை தேர்ந்தெடுத்தால், அது பைத்தியக்காரத்தனம்.