சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தன் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்பை பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை (டிசம்பர் 10) டர்பனில் உள்ள் கிங்ஸ் மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆபபிரிக்க அணியானது ஏற்கென்வே இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிய கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
அதிலும் தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணியானது ஹென்ரிச் கிளாசென் தலமையில் களமிறங்கவுள்ளது. மறுபக்கம் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே டி20 தொடரை வென்ற கையோடு இந்த தொடரை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Trending
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் சிறப்பு உலக சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்லார். அதன்படி இந்தப் போட்டியில் பாபர் 40 ரன்கள் எடுத்தால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார். பாபர் ஆசாம் இதுவரை 126 போட்டிகளில் விளையாடி 4,192 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையானது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா பெயரில் உள்ளது. ரோஹித் சர்மா இதுவரு 159 டி20 போட்டிகளில் விளையாடி 4,231 ரன்களுடன் முதலிடத்தில் நீடித்தி வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 4,192 ரன்களுடன் பாபர் ஆசாம் இரண்டாம் இடத்திலும், 4188 ரன்களுடன் விராட் கோலி மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
11000 டி20 ரன்கள்
மேலும் இத்தொடரில் பாபர் ஆசாம் 11 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் டி-20 கிரிக்கெட்டில் 11000 ரன்களைக் கடந்த பாகிஸ்தானின் இரண்டாவது மற்றும் உலகளவில் 11ஆவது வீரர் என்ற பெருமையையும் பெறுவார். இதுவரை 307 போட்டிகளில் 296 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் ஆசாம் 10989 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு முன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் மட்டுமே பாகிஸ்தானுக்காக இந்த நிலையை எட்டியுள்ளார்.
14000 சர்வதேச ரன்கள்
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து பாபர் ஆசாம் இப்போட்டியில் 2 ரன்கள் எடுப்பதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 14000 ரன்களை நிறைவு செய்வார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டும் பாகிஸ்தானின் ஐந்தாவது வீரர் எனும் பெருமையும் அவருக்கு கிடைக்கவுள்ளது. மூன்று வடிவங்களையும் சேர்த்து 301 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் ஆசாம் 13, 998 ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன், இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுப், ஜாவேத் மியான்தத் ஆகியோர் மட்டுமே பாகிஸ்தான் அணிக்காக இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now