2-mdl.jpg)
இந்திய அணியின் எதிர்கால வீரராக கருதப்பட்ட கேஎல் ராகுலின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் அவரது பேட்டிங் செயல்பாடு கொஞ்சமும் திருப்தி அளிப்பதாக இல்லை. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு மிக முக்கிய காரணமாக துவக்க வரிசையில் இறங்கி அழுத்தத்தால் ரன்கள் எடுக்க முடியாமல் அணி மீது அழுத்தத்தை உருவாக்கிய கேஎல் ராகுல் இருந்தார். அதற்கு முந்தைய டி20 உலக கோப்பையிலும் அதேதான் நடந்தது
தற்பொழுது இந்தியாவில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளிலும் மிக மோசமாக விளையாடிய காரணத்தால் அடுத்த இரண்டு போட்டிக்கான அணி அறிவிப்பில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அடுத்த துணை கேப்டனாக வருவதற்கு யார் சரியானவர்களாக இருப்பார்கள் என்கின்ற விவாதம் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை சமூக வலைதளத்தில் காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது.