
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (பிப்ரவரி 9) கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறும். ஏற்கெனவே முதல் போட்டியை வென்றுள்ள இந்திய அணி இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
விராட் கோலி விளையாட வாய்ப்பு
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13906 ரன்கள் எடுத்த விராட் கோலி, தனது 17 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக காயம் காரணமாக ஒருநாள் போட்டியைத் தவறவிட்டார். அவர் முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. இருப்பினும் அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.