அணியின் கேப்டன் யார் என்பதை சில நாள்களில் அறிவிப்போம் - சஞ்சீவ் கோயங்கா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டன் முடிவு செய்யப்பட்டு, ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோய்ங்கா தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏல்ம் நடத்தப்பட்டது. இதனால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.
Trending
இந்நிலையில், இந்த ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீர்ர் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து அவர் தான் அந்த அணியின் புதிய் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியகின. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூர்னும் கடந்த சீசனில் அணியின் துணைகேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், கேப்டசிக்கான போட்டியில் அவரது பெயரும் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அந்த அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் புதிய கேப்டன் முடிவு செய்யப்பட்டு, ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மக்கள் எளிதில் ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் எளிதில் ஆச்சரியப்படுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அணியின் கேப்டன் யார் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். எங்கள் அணியில் ரிஷப், பூரன், மார்க்ராம் மற்றும் மிட்ச் மார்ஷ் ஆகிய நான்கு கேப்டன் தேர்வுகள் உள்ளன. எனவே, இது அறிவு, சிந்தனை மற்றும் முடிவெடுத்தல் என தலைமைத்துவத்து முன்னெடுத்து தேர்வு செய்யபடவுள்ளனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லக்கூடியவர்கள். ரிஷப் பந்திட்ம் அந்த பசியும், வெல்வதும், எதையாவது செய்து காட்ட வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருக்கிறது.
எனவே, அணி நன்றாக உள்ளது, நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். மேலும் எங்கள் ஏலம் மிகவும் நன்றாக இருந்தது என்பது எங்கள் உள் உணர்வு. எங்கள் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் மிகவும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் எங்கள் கவனம் இருந்தது. எனவே அதற்கு தகுந்தார்போல் நாங்கள் ஏலத்தில் செயல்பட்டுள்ளோம். நாங்கள் விரும்பிய மற்றொரு விஷயம் என்னவென்றால், சர்வதேச வேகத்திற்குப் பதிலாக இந்திய வேகத் தாக்குதலுடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் நாங்கள் அதிரடியாக விளையாடும் சர்வதேச பேட்டர்களைத் தேர்வுசெய்தோம். எனவே, இப்போது எங்களிடம் உள்ளூர் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சர்வ்தேச அதிரடி வீரர்கள் என இரண்டின் கலவையைப் பெற்றுள்ளோம். அதனால் போட்டியின் போது எந்த மாதிரியான பிளேயிங் லெவனை கட்டமைக்க வேண்டும் என்பதை இனி ஜாகீர் கான், ஜஸ்டின் லங்கர் மற்றும் அணியின் கேப்டன் பார்த்து கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now