
இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 2023 உலகக்கோப்பை தொடருக்கு பின் மூத்த வீரர்கள் இந்திய அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முடிவு செய்தது பிசிசிஐ.
ஆனால், விராட் கோலி தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இடம் பெற விரும்பவில்லை எனக் கூறி இருந்த நிலையில், ரோஹித் சர்மாவும் அதே முடிவை எடுத்துள்ளார். மூத்த வீரர்கள் விலகல் மற்றும் இனி டி20 உலகக்கோப்பை முடியும் வரை ஒருநாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறையும் என்ற நிலையில், ஒருநாள் அணியில் பல வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது
இதுவரை ஒருநாள் அணியில் வாய்ப்பு பெறாத சஞ்சு சாம்சன், காயத்தில் இருந்த ரஜத் படிதார், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ஒருநாள் அணிக்கு திரும்ப உள்ளனர். ஒருநாள் அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட உள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதால் சாய் சுதர்சன், ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.