
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது இன்று (பிப்ரவரி 12) தொடங்கவுள்ளது.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இரு அணிகளும் இத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முகமது ரிஸ்வான் தலைமையிலான இந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃபிற்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.