
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு நிலவிவரும் ஒரே குழப்பம் என்னவென்றால், கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவலில் வாய்ப்பு கொடுத்து ஓபனிங் இறங்க வைக்க வேண்டும் என்பதுதான்.
கேஎல் ராகுல் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று ஓபனிங் செய்தார். மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 38 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டு, கேஎல் ராகுல் வெளியில் அமர்த்தபட்டார்.
ஷுப்மன் கில், கிடைத்த இந்த வாய்ப்பை எதிர்பார்த்த வகையில் பயன்படுத்தவில்லை. முதல் இன்னிங்ஸ் 21 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்கள் என ஆட்டம் இழந்தார். ஒட்டுமொத்த அணியே தடுமாறினாலும், ஷுப்மன் கில்லுக்கு கிடைக்காத வாய்ப்பு கிடைத்ததால் அவர் மீது எதிர்பார்ப்பிற்கு ரன்கள் அடிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.