
பார்டர் கவாஸ்கர் கோப்பை கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை இந்தூரில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா ந அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் இந்தூர் மைதானத்தில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாட் கம்மின்ஸ் நாடு திரும்பியதால் ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். வீரர்களின் காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்திய அணியை பொறுத்தவரை பெரும்பாலும் ஆடும் லெவனில் மாற்றம் இருக்காது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படும் என்றால் கே எல் ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில் களம் இறங்குவார் . இது ஒன்றுதான் மாற்றமாக இருக்கும் மற்றபடி அணித் தேர்வில் எந்தவித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது .