
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் ஜஸ்பிரீத் பும்ரா, கடந்த ஆசியக் கோப்பை தொடரின் போது காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு செப்டம்பர் மாதம் குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அவருக்கு மறுபடியும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு விலகினார்.
அதன்பிறகு டி20 உலகக்கோப்பை உட்பட தற்போது வரை எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. கடந்த டிசம்பர் மாதம் குணமடைந்துவிட்டார் என்ற தகவல் வந்தது. ஆனால் அணியில் எடுக்கப்படவில்லை.
பிப்ரவரி மாதம் இறுதியில் மீண்டும் காயம் அடைந்துவிட்டார் என்றும் தெரியவந்தது. அதன் பிறகு மார்ச் மாதம் முதல் வாரம் முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் கிட்டத்தட்ட 9 மாத காலம் அவரால் எந்தவித சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட முடியாது என்று உறுதியாகியது.