Lionel messi argentina
நான் இனியும் தேசிய அணிக்காக விளையடுவேன் - மெஸ்ஸியின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!
கத்தார் நாட்டில் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. இதில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்த போட்டிதான் மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டி என்று கூறப்பட்டது.
ஆனால் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய மெஸ்ஸி, "இதை நம்பவே முடியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரியும் இறைவன் இந்தக் கோப்பையை எனக்கு அளிப்பார் என்று. இதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த நாள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் நாள். இந்த கனவை நான் நீண்ட நாள் கொண்டிருந்தேன். நான் எனது பயணத்தை ஒரு உலகக் கோப்பையுடன் நிறைவு செய்யவே ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அதை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்கிறேன். நான் இனியும் தேசிய அணிக்காக விளையடுவேன். உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அர்ஜென்டினா ஜெர்சியுடன் விளையாடவே நான் விரும்புகிறேன்.
Related Cricket News on Lionel messi argentina
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மெஸ்ஸி மேஜிக்; மூன்றாவது கோப்பையை தூக்கியது அர்ஜெண்டினா!
பிரான்ஸ் அணிக்கெதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: சாதனைகளை குவித்து வரும் லியோனல் மெஸ்ஸி!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கல் அடித்த வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவிக்கிறாரா மெஸ்ஸி?
நடப்பாண்டு ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியுடன் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மெஸ்ஸி; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!
குரோஷியா அணிக்கெதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பாந்து அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 6ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சியளிக்குமா குரோஷியா?
அர்ஜெண்டினா - குரோஷியா அணிகள் மோதும் உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி இன்று நள்ளிரவு தோஹாவில் நடைபெறுகிறது. ...
-
மாரடோனாவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மெஸ்ஸியின் மேஜிக்கால் காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!
உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: வாழ்வா சாவா ஆட்டத்தில் போலாந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா அபார வெற்றி!
போலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைகளில் அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்களை அடித்த 2ஆவது வீரர் என்ற மாரடோனாவின் சாதனையை லியோனல் மெஸ்ஸி சமன் செய்தார் . ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47