%E0%AE%92%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95 2024
நாங்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷாருக் கான் 37 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயாள், முகமது சிராஜ், வைசாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இப்போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் கடந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் வில் ஜேக்ஸ், கேமரூன் க்ரீன், ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Related Cricket News on %E0%AE%92%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95 2024
-
பவர்பிளேவில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!
நாங்கள் பவர் பிளேவில் பேட்டிங் செய்த விதமும், பவர் பிளேவில் பந்து வீசிய விதமும் மோசமாக இருந்ததாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: டூ பிளெசிஸ், கோலி அதிரடி; குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
விருப்பு, வெறுப்பின் காரணமாக எதையும் பேசுவதில்லை - கோலி கருத்துக்கு கவாஸ்கரின் பதில்!
நாங்கள் உங்கள் அளவிற்கு கிரிக்கெட்டை விளையாடாவில்லாலும், ஏதோ கொஞ்சம் கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம் என விராட் கோலியின் கருத்துக்கு சுனில் கவாஸ்கர் தனது பதிலடியை கொடுத்துள்ளார். ...
-
இந்த சீசனில் மயங்க் யாதவ் இனி விளையாடமாட்டார் - ஜஸ்டின் லங்கர்!
காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், இந்த சீசனில் இனி விளையாடமாட்டார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
மனீஷ் பாண்டே எங்களுக்கு தேவையாக இலக்கை எட்ட உதவினார் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்றைய போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை எங்களுக்கு பெரிதளவில் உதவியாக அமைந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
சரியான பார்ட்னர்ஷிப் அமைக்காததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை பெற வேண்டி இருக்கும் என தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மிட்செல் ஸ்டார்க் அபாரம்; மும்பை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
BAN vs ZIM, 1st T20I: தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கி தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆரை கரைசேர்த்த வெங்கடேஷ், மனீஷ் பாண்டே; மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24