%E0%AE%9F%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது பொறுப்பான ஃபினிஷிங்கின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 240 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன்பின் 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on %E0%AE%9F%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
SL vs IND, 2nd ODI: முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தொடக்க வீரர் பதும் நிஷங்கா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்; இந்திய அணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு!
எதிர்வரவுள்ள துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு; தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா விலகியுள்ளார். ...
-
ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒரு சிலரில் பும்ராவும் ஒருவர்- ரவி சாஸ்திரி புகழாரம்!
நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவராக இருந்தார் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். ...
-
தி ஹண்ட்ரட் 2024: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
லைகா கோவை கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ், டிஎன்பிஎல் இறுதிப்போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எட்டாவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SL vs IND, 2nd ODI: நாளைய போட்டியில் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
-
SL vs IND, 2nd ODI: பிளேயிங் லெவனை மாற்றுமா இந்தியா?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ...
-
ஃபீல்டிங்கில் அசத்தலான கேட்ச்சைப் பிடித்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார். ...
-
தொடக்க வீரராக அசத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இருதரப்பு தொடர்களில் புதிய மைல் கல்லை எட்டினார் விராட் கோலி!
சர்வதேச இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் 21ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்கா!
எதிரணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
நாங்கள் சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் பின்னடைவை சந்தித்தோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24