indian premier league 2024
ஐபிஎல் 2024: நரைன், சக்ரவர்த்தி அசத்தல்; லக்னோவை பந்தாடியது கேகேஆர்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழக்கம் போல் சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 61 ரன்களைச் சேர்த்த நிலையில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் எடுத்திருந்த பில் சால்ட் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சுனில் நரைன் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Related Cricket News on indian premier league 2024
-
பந்துவீச்சாளர்களுக்கு தேவையான ஸ்கோரை கொடுக்க விரும்பினேன் - ரவீந்திர ஜடேஜா!
நாங்கள் இப்போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 30 - 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, பந்துவீச்சாளர்களுக்கு தேவையான ஸ்கோரை கொடுக்க விரும்பினேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் மிரட்டிய நரைன்; லக்னோ அணிக்கு 236 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் நினைத்ததை விட மைதானம் மெதுவாக இருந்தது - சாம் கரண்!
போட்டிக்கு முன்னதாக இந்த மைதானதில் வேகமும், பவுன்ஸும் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இந்த பிட்ச் நாங்கள் நினைத்ததை விட மிகவும் மெதுவாக இருந்தது என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸை பந்தாடி சிஎஸ்கே அபார வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: ராகுல், ஹர்ஷல் அபார பந்துவீச்சு; சிஎஸ்கேவை 167 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதலிரண்டு பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய ராகுல் சஹார்; வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ராகுல் சஹார் தனது முதலிரண்டு பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் நாடு திரும்பிய பதிரனா; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா இலங்கை திரும்பியுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நாங்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
கடந்த சில போட்டிகளாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறையிலும் நல்ல முன்னேற்றமடைந்துள்ளோம் என ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பவர்பிளேவில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!
நாங்கள் பவர் பிளேவில் பேட்டிங் செய்த விதமும், பவர் பிளேவில் பந்து வீசிய விதமும் மோசமாக இருந்ததாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: டூ பிளெசிஸ், கோலி அதிரடி; குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
விருப்பு, வெறுப்பின் காரணமாக எதையும் பேசுவதில்லை - கோலி கருத்துக்கு கவாஸ்கரின் பதில்!
நாங்கள் உங்கள் அளவிற்கு கிரிக்கெட்டை விளையாடாவில்லாலும், ஏதோ கொஞ்சம் கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம் என விராட் கோலியின் கருத்துக்கு சுனில் கவாஸ்கர் தனது பதிலடியை கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24