Advertisement

lsg vs rcb

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஐந்தாம் இடத்திற்கு  முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
Image Source: Google
Advertisement

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

By Bharathi Kannan April 03, 2024 • 14:58 PM View: 206

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்பொட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 81 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

Related Cricket News on lsg vs rcb