Advertisement
Advertisement

maia bouchier

ENGW vs NZW, 2nd ODI: மையா பௌச்சர் அபார சதம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்த
Image Source: Google
Advertisement

ENGW vs NZW, 2nd ODI: மையா பௌச்சர் அபார சதம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து!

By Bharathi Kannan June 30, 2024 • 22:53 PM View: 51

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியது.  இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று வொர்செஸ்டரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீராங்கனைகள் சூஸீ பேட்ஸ் - பிலிம்மெர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த அமெலியா கெர் மற்றும் கேப்டன் சோஃபி டிவைன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சோஃபி டிவைன் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேடி க்ரீனும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Advertisement

Related Cricket News on maia bouchier

Advertisement