mi vs pbks
பும்ராவுக்கு எதிராக நான் சிக்ஸர் அடித்ததில் மகிழ்ச்சி - அஷுதோஷ் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷான் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - ரோஹித் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் ரோஹித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் திலக் வர்மா 34 ரன்களையும், டிம் டேவிட் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சாம் கரண் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on mi vs pbks
-
டி20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கு கடினமான ஒன்று - ஜஸ்பிரித் பும்ரா!
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் பந்துவீச சற்று கடினமாக உள்ளது என மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது - சாம் கரண்!
அஷுதோஷ் சர்மா -ஷஷாங்க் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இருவரால் தான் நெருங்கி வந்தோம் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அஷுதோஷ் போராட்டம் வீண்; பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ரைலீ ரூஸோவை யார்க்கரால் தடுமாறச் செய்த ஜஸ்ப்ரித் பும்ரா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரப்ஷிம்ரன் சிங் - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்ஷிம்ரன் சிங் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன!
பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதில் காண்போம். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி - ஷிம்ரான் ஹெட்மையர்!
இதுபோன்ற சூழலில் விளையாட என்னால் முடிந்தளவு வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷிம்ரான் ஹெட்மையர் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் தொடக்கமும், முடிவும் சரியாக அமையவில்லை - சாம் கரன்!
நாங்கள் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தோம். ஆனால் மீண்டும் கடைசி ஓவரில் சென்று தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது என பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
-
ஷிம்ரான் ஹெட்மையர் பல ஆண்டுகளாக இதனை செய்துவருகிறார் - சஞ்சு சாம்சன்!
ஹெட்மையர் கடந்த பல ஆண்டுகளாகவே எங்கள் அணிக்காக இதே போன்று பல போட்டிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: நொடிக்கு நொடி பரபரப்பு; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்த சஞ்சு சாம்சன் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: அஷுதோஷ் சர்மா அதிரடி ஃபினிஷிங்; ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24