2025
தென் ஆப்பிரிக்கா 404 ரன்களில் ஆல் அவுட்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 87 ரன்களையும், சௌத் ஷகீல் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஐடன் மார்க்ரமும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Related Cricket News on 2025
-
லாரா வோல்வார்ட், மரிஸான் கேப் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்த்து, இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்கா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இந்தியாவை 4 ரன்னில் வீழ்த்திய இங்கிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறியும் அசத்தல்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதிக்கு முன்னேறியது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை எதிர்த்து, இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
வோல்வார்ட், பிரிட்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்18ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்த்து, பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
மகளிர் உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த அலிசா ஹீலி!
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலீசா ஹீலி சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
அலிசா ஹீலி அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலாங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை எதிர்த்து, இலங்கை மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்17ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, நஹிதா அக்தர் தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. ...
-
நோமன் அலி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ் போட்டியில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47