Fa cup
தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்த வகையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் ’எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளிலும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை தோல்வியுடன் தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் மும்பை அணி தனது வெற்றி கணக்கை தொடருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Related Cricket News on Fa cup
-
டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!
கத்தார் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நேபாள் அணி வீரர் திபேந்திர சிங் ஐரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். ...
-
PAK vs NZ: தொடரிலிருந்து விலகிய ஆலன், மில்னே - பிளெண்டல், ஃபால்க்ஸிற்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபின் ஆலன், ஆடம் மில்னே இருவரும் காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடும் நியூசிலாந்து வீரர்களுக்கு ஆதரவு கொடுத்த டிம் சௌதீ!
நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சொந்த நாட்டின் தொடரை தவறவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு அந்த அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ பதிலடி கொடுத்துள்ளார். ...
-
அதிரடி காட்டிய அமெரிக்கா; போராடி தோற்ற கனடா!
கனடா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தான் டி20 அணியில் முகமது அமீர், இமாத் வசிம், உஸ்மான் கானுக்கு இடம்!
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தால் தடைசெய்யப்பட்ட உஸ்மான் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் - ரோஹித் தொடக்கம் தர வேண்டும் - பிரையன் லாரா!
டி20 உலகக்கோப்பை தொட்ருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் இருவரும் டி20 உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு & பிரையன் லாரா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட வேண்டும் அம்பத்தி ராயுடு மற்றும் பிரையன் லாரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். ...
-
PAK vs NZ: நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமனம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்!
வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
-
தேர்வு குழுவின் முடிவு என ஆச்சரியமாக உள்ளது - ஷாஹித் அஃப்ரிடி!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் ஆசாமை மீண்டும் நியமித்துள்ள தேர்வு குழுவின் முடிவு தனக்கு ஆச்சரியமளிப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் ஆசாம் நியமனம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் ஆசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஏப்ரல் இறுதியில் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு?
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியானது வரும் ஏப்ரல் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: முத்தரப்பு தொடரில் விளையாடும் அயர்லாந்து, நெதர்லாந்து & ஸ்காட்லாந்து!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன. ...
-
அமெரிக்க டி20 அணியில் இடம்பிடித்த கோரி ஆண்டர்சன்; உன்முக் சந்திற்கு வாய்ப்பு மறுப்பு!
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் அமெரிக்க டி20 அணியில் இடம்பிடித்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47