Gg vs rcb
தோல்வியடைந்தாலும் அவர் விளையாடிய விதம் மகிழ்ச்சியே - ஐடன் மர்க்ரம்!
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. ஆர்சிபி அணி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அடுத்த போட்டி இன்னும் எளிதாகிவிடும் என்கிற கோணத்திலும் களமிறங்கியது.
முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ஹென்றிச் கிளாசென், அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 101 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். ஹைதராபாத் அணி 186 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த விராட் கோலி 62 பந்துகளில் சதம் அடித்து ஆட்டம் இழந்தார். டு பிளசிஸ் 71 ரன்கள் விளாசினார். 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் நல்ல முன்னேற்றமும் கண்டது.
Related Cricket News on Gg vs rcb
-
அடுத்தப் போட்டிக்கு எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நாங்கள் மைதானத்தின் பல்வேறு பக்கங்களில் ஷாட்டுகள் அடித்தோம். எங்களுக்கு பவுலிங் செய்வதே கடினமாக இருந்திருக்கும் என போட்டி முடிந்தபின் ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சதமடித்தார் ‘கிங்’ கோலி; ஹைதராபாத்தை வீழ்த்தியது ஆர்சிபி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சதமடித்து சிங்கம் போல் கர்ஜித்த ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் சதமடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கிளாசென் அபார சதம்; ஆர்சிபிக்கு 187 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசென் சதமடித்து அசத்தினார். ...
-
ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களை காலி செய்த பிரேஸ்வெல்; வைரல் காணொளி!
பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இது போன்ற வெற்றி எங்களுக்கு தேவைப்பட்டது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆர் சி பி கேப்டன் டுபிளசிஸ், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். ...
-
இது எப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை - தோல்வி குறித்து சஞ்சு சாம்சன்!
எங்களுடைய ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் ஏன் இவ்வளவு மோசமாக மாறியது என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ரோஹித்தின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் சமன் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; ராஜஸ்தானுக்கு 172 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023:ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
என் ஆட்டம் எனக்குத் தெரியும் - சூர்யகுமார் யாதவ்!
தனது ஆட்டம் குறித்து தனக்குத் தெரியும் என்று ஆட்ட நாயகன் விருதுக்குப்பின் பேட்டி அளித்த சூர்யகுமார் தெரிவித்தார். ...
-
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த கேஎல் ராகுல்!
அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது. விரைவில் என்னுடைய கம்பேக் கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கேஎல் ராகுல் தனது சமூக வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24