Indian cricket league
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் பிரஷித் கிருஷ்ணா!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 23, 2024 அன்று, வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா தனது இடது தொடையில் அறுவை சிகிச்சை செய்தார். தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ள அவர், விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு செயல்முறையைத் தொடங்குவார். இதன் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.
Related Cricket News on Indian cricket league
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஓர் பார்வை!
நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் - பிசிசிஐ!
ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்!
காயத்தியிலிருந்து மீண்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் பார்வை!
நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
சிஎஸ்கே அணிக்காக ரோஹித் சர்மா விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு விருப்பம்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கிய என்சிஏ!
வரவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்; அதிரடி வீரரை தட்டித்தூக்கிய கேகேஆர்!
வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் ஜேசன் ராய்க்கு பதிலாக அதிரடி வீரர் பிலிப் சால்ட்டை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் எப்போது? - அருண் தூமல் பதில்!
நிச்சயமாக நாங்கள் அடுத்த வருடம் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தை நடத்துவோம் என்று ஐபிஎல் நிர்வாக தலைவர் அருண் தூமல் தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் இருவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு - விராட் கோலி குறித்து டு பிளெசிஸ் ஓபன் டாக்!
ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தனக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024:புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய மும்பை, ஹைதராபாத்!
இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ...
-
ஓய்வை அறிவிக்கிறாரா தினேஷ் கார்த்திக்? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இணையத்தில் தீயாய் பரவும் தோனியின் பதிவு; குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்; முழு பட்டியல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்வுள்ள நிலையில், இத்தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்களின் முழு பட்டியலை இப்பதிவில் காண்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47