Ishan kishan
துலீப் கோப்பை 2024: இஷான் கிஷன், இந்திரஜித் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா சி அணி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொடங்கிய நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா சி அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பின் இணைந்த சாய் சுதர்ஷன் - ராஜத் பட்டிதார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் சுதர்ஷன் 43 ரன்களிலும், ராஜத் பட்டிதார் 40 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - பாபா இந்திரஹித் இணை இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Ishan kishan
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் பந்துவீசி அசத்திய இஷான் கிஷான் - வைரலாகும் காணொளி!
புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் இஷான் கிஷான் பந்துவீசியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காணொளியானது இணையத்தில் வைர்லாகி வருகிறது. ...
-
புஜ்ஜி பாபு கோப்பை 2024: விக்கெட் கீப்பிங்கில் அசத்திய இஷான் கிஷன்!
புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியை வழிநடத்திவரும் இஷான் கிஷான் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
புஜ்ஜி பாபு கோப்பை 2024: ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்!
புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்!
இம்மாதம் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்; இந்திய அணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு!
எதிர்வரவுள்ள துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ், இஷான் - ஜெய் ஷா பதில்!
இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை ஒப்பந்த பட்டியளில் இருந்து நீக்கும் முடிவை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தான் எடுத்தார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: வானவேடிக்கை காட்டிய பேட்டர்கள்; ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஆர்சிபி அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சித்தி விநாயகர் கோயிலியில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
-
வலுக்கட்டாயமாக நீங்கள் எதையும் செய்ய முடியாது - விருத்திமான் சஹா!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, வீரர்களை பிசிசிஐ கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸ், இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது சரியான முடிவு தான் - சௌரவ் கங்குலி!
இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் தவிர்ப்பது தனக்கு ஆச்சரிமளித்ததாக முன்னாள் பிச்சிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ எடுத்த நடவடிக்கை; கேள்வி எழுப்பும் இர்ஃபான் பதான்!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானில் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - ஸ்ரேயாஸ், இஷானுக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி!
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சவால்களை எதிர்கொண்டு வலுவாக திரும்பு வாருங்கள் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!
நடப்பாண்டிற்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ...
-
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24