Kc karan
ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைனும் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறக்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு சின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Kc karan
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: சதமடித்து மிரட்டிய தீபக் ஹூடா; இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்!
கர்நாடகா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2023: தடுமாறிய மும்பை; காப்பாற்றிய திலக் வர்மா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கே வீரர் செய்த உதவி; புகழ்ந்த சோனு சூட்!
தனது பவுண்டேஷனுக்கு நிதியுதவி வழங்கி வரும் சிஎஸ்கே வீரர் கரண் சர்மாவை பாரட்டி சோனு சூட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24