Odi world
கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - முகமது ஷமி!
ஐசிசியின் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் நான்கு போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இன்று தங்களது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியையும் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்ததோடு புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கும் சென்றுள்ளது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் நான்கு ஆட்டங்களில் இடம்பெறாத இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பினை மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொண்ட முகமது ஷமி இந்த போட்டியில் முழுவதுமாக 10 ஓவர்களையும் வீசி 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
Related Cricket News on Odi world
-
விராட் கோலியை சேசிங்கில் தடுத்து நிறுத்த முடியவில்லை - டாம் லேதம்!
விராட் கோலி சேசிங்கில் அபாரமாக செயல்படுகிறார். அவரை தடுத்து நிறுத்துவது கடினமாகும் என நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்குபின் விராட் கோலி, முகமது ஷமியை பாராட்டிய ரோஹித் சர்மா!
விராட் கோலியை பற்றி நிறைய பேச எதுவுமே இல்லை. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே அவர் இதைத்தான் செய்து வருகிறார் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார். ...
-
ஐசிசி தொடர்களில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
ஐசிசி தொடர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாதனை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; இந்தியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன - இமாம் உல் ஹக்!
ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார் . ...
-
ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக சதமடித்து டேரில் மிட்செல் சாதனை!
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் டேரில் மிட்செல் படைத்துள்ளார். ...
-
5 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகக்கோப்பையில் ஷமி புதிய சாதனை!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் அபார சதம்; கம்பேக்கில் கலக்கிய முகமது ஷமி!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் - நாசர் ஹூசைன்!
இங்கிலாந்து அணி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ...
-
கேட்ச் பிடித்து ஜடேஜாவைப் பொல் கொண்டாடிய ஸ்ரேயாஸ் ஐயர்!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான கேட்சை பிடித்த பின் ஜடேஜா எப்படி பதக்கம் கொடுங்கள் என்று பயிற்சியாளரை பார்த்து கொண்டாடினாரோ, அதேபோல் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் கொண்டாடியுள்ளார். ...
-
இதுதான் நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு காரணம் - விராட் கோலி!
நியூசிலாந்து ஒன்றும் பல தவறுகளை செய்யக்கூடிய அணி கிடையாது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
சென்னை, அஹ்மதாபாத் பிட்ச் குறித்த ஐசிசியின் கருத்துக்கு ராகுல் டிராவிட் எதிர்ப்பு!
300 – 350 ரன்களை அடிக்கும் பிட்ச்கள் தான் நன்றாக இருக்கிறது என்று தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐசிசிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24