Sa vs zim
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs PAK 2nd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 80 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய ஜிம்பாப்வே அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sa vs zim
-
ZIM vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சில முடிவுகள் எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை - முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் அணியில் இருந்து ஃபகர் ஸமான் நீக்கப்பட்டது குறித்து அணியின் புதிய கேப்டன் முகமது ரிஸ்வான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார் ஆல்-ரவுண்டர் ரஷீத் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஃப்கானிஸ்தான் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமனம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் புதிய பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் கேரி கிறிஸ்டன்!
பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கேரி கிர்ஸ்டன் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானையும், துணைக்கேப்டனாக சல்மான் அலி அகாவும் நியமிக்கப்ப்ட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது ...
-
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
நடத்தை விதிகளை மீறியதாக ஹாரி டெக்டருக்கு அபராதம் விதித்த ஐசிசி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs ZIM, Only Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
IRE vs ZIM, Only Test: அயர்லாந்து 250 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வே 210 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து!
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47