Shikhar dhawan
ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த ஷிகர் தவான்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை 11 போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது 51ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்த நிலையிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியால் இப்போட்டியில் வெற்றியை ஈட்ட முடியவில்லை.
Related Cricket News on Shikhar dhawan
-
இப்படி ஒருஅறிமும் இருக்கும் என்று நினைத்ததில்லை - மயங்க் யாதவ்!
இப்போட்டியில் எனது முதல் விக்கெட்டாக ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்தியது சிறப்பானது என ஆட்டநாயகன் விருதை வென்ற லக்னோ அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
மயங்க் யாதவின் பந்துவீச்சு அபரிவிதமானது - ஷிகர் தவான்!
லக்னோ அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவின் வேகம் மற்றும் லைன், லெந்த் ஆகியவை எனக்கு ஆச்சரியமாக உள்ளது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
அறிமுக போட்டியில் அதிவேகமாக பந்துவீசி மிரட்டும் மயங்க் யாதவ் - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தனது அறிமுக போட்டியில் விளையாடிவரும் மயங்க் யாதவ் 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ...
-
பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - ஷிகர் தவான்!
நாங்கள் பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்ததும், விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட்டதும் போட்டியின் முடிவை மாற்றிவிட்டது என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது - ஷிகர் தவான்!
இது புதிய மைதானம் என்பதால் இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மோசமான சாதனை படைத்த ஷிகர் தவான்!
ஐபிஎல் தொடரில் அதிக முறை போல்டான வீரர் எனும் மோசமான சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ்!
நடப்பு சீசன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மற்றும் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இன்று வெளியிட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
ஷிகர் தவான் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ரிஷப் பந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டு வந்துள்ளார் - ஷிகர் தவான்!
கடினமான சூழலில் இருந்து தனது பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றால் ரிஷப் பந்த் மீண்டு வந்துள்ளதாக இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்!
என்னுடைய நிறைய சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை நான் ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் கொடுப்பேன் என இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன் - ஷிகர் தவான் உருக்கம்!
தன்னுடைய மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன். மேலும் கடைசி மூன்று மாதமாக தன் மகனை சந்திப்பதற்கான எல்லா வழியிலும் தான் தடுக்கப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ...
-
உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலை வைத்து ஷிகர் தவான் பகிர்ந்த பதிவு!
நடைபெற்றுவரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் எதுவேண்டுமானலும் நடக்கலாம் என இந்திய வீரர் ஷிகர் தவான் எச்சரித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47