The cricket
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs Papua New Guinea Dream11 Prediction Match 2, ICC T20 World Cup 2024: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதுமட்டுமின்றி எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் சி குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அறிமுக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பப்புவா நியூ கினியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளும் முதல் முறையாக டி20 போட்டிகளில் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
WI vs PNG Match Details
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா
- இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
- நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
WI vs PNG : Pitch Report
பிராவிடன்ஸ் மைதானமானது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலைக்கு பெயர் போனது. இங்குள்ள மைதானமாது முதல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு வழிவகுக்கும். அதன்பின் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏறபடுத்த முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது, குறிப்பாக ஆடுகளத்தின் வேகம் குறையும் போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் உதவியாக அமையும். இருப்பினும் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் நிச்சயம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Related Cricket News on The cricket
-
துபேவை விட ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
உலகக்கோப்பை போன்ற மிகப்பெரும் தொடர்களில் நான் ஷிவம் தூபேவுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்டியாவிற்கே அதிகளவு முன்னுரிமை கொடுப்பேன் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அதிவேக அரைசதமடித்த வீரர்களின் பட்டியல்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேக அரைசதமடித்த வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
அசாம் கான், ஷதான் கான் தேர்வு குறித்த கேள்வி; கடிந்துகொண்ட பாபர் ஆசாம்!
அசாம் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்த்தது குறித்த கேள்விக்கு பாபர் ஆசாம் கேபத்துடன் பதிலளித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹர்திக், ஷிவம் தூபே ஆகியோர் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் - இர்ஃபான் பதான்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் தூபே இருவரும் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs கனடா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பயிற்சி ஆட்டம்: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
முதல் போட்டியில் மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் என அந்த அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர்; ஆஸியை பந்தாடிய பூரன் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களை விளாசிய காணொளியானது வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் எங்களுக்காக ஒரு சிறந்த அணி விளையாடுகிறது - இர்ஃபான் பதான்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் விளையாடும் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் விளையாட வேண்டும் - ஷோயப் மாலிக்
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார். ...
-
இந்தியா - வங்கதேசம், பயிற்சி ஆட்டம் - நேரலை & அணி விவரங்கள்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன். ...
-
IPL 2025 Retention Rules: பழைய விதிமுறையை மாற்ற முயற்சிக்கும் பிசிசிஐ!
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடென்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24