The super
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 28 ரன்களில் வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபாஃப் டூ பிளெசிஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கான்வேவுடன் இணைந்த லியுஸ் டு ப்ளூய் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இவரும் அபாரமாக விளையாடிய நிலையில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. பின் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் டெவான் கான்வே தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on The super
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சூப்பர் கிங்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி வீரர் டெவால்ட் பிரீவிஸ் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: குர்பாஸ், ஜேக்ஸ் அதிரடி வீண்; பிரிட்டோரியாவை 2 ரன்களில் வீழ்த்தி டர்பன் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன் அரைசதம்; பிரிட்டோரியா அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: இடம், போட்டி நேரம், நேரலை & அணிகளின் முழு வீவரம்!
மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெறும் இடம், போட்டி நேரம், இந்திய ரசிகர்கள் இத்தொடரை எவ்வாறு பார்பது மற்றும் ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்கள் என மொத்த விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
நான் நன்றாக விளையாடினால் தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என சமூக வலைதள பதிவு குறித்த கேள்விக்கு மகேந்திர சிங் தோனி பதிலளித்துள்ளார். ...
-
மார்ச் 14-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன் - அஸ்வின்!
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ...
-
அணியின் கேப்டன் யார் என்பதை சில நாள்களில் அறிவிப்போம் - சஞ்சீவ் கோயங்கா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டன் முடிவு செய்யப்பட்டு, ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோய்ங்கா தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் உருக்கமான பதிவு!
ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீர்ர் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து, அவர் முன்பு விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் பரத் ஜிண்டல் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
சிஎஸ்கே என்னை தேர்வு செய்யவில்லை எனில் அந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்- தீபக் சாஹர்!
இந்த சீசனில் சிஎஸ்கே அணி தன்னை தக்கவைக்காவிட்டாலும், எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் தன்னை நிச்சயம் வாங்கு என தீபக் சஹார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 4 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் யார்?
இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு இடது கை பந்துவீச்சாளர் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
தோனி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் எப்போது அணியுடன் இருப்பார் - ரிக்கி பாண்டிங்!
எம்எஸ் தோனி எந்த அணியில் இருக்கிறாரே, அதில் அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் எப்போதும் அந்த குழுவைச் சுற்றி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருப்பார் என முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24