Varun chakaravarthy
சக்ரவர்த்திக்கு 20ஆவது ஓவரை கொடுத்ததன் காரணம் என்ன? - நிதீஷ் ரானா பதில்!
ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற 47ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தாலும் நித்திஷ் ராணா 42 ரன்களையும், ரிங்கு சிங் 46 ஆகியோரது அற்புதமான பாட்னர்ஷிப் காரணமாக ஒரு நல்ல ஸ்கோரை எட்டியது.
Related Cricket News on Varun chakaravarthy
-
கடைசி ஓவரை வீசும் பொழுது எனது இதயத்துடிப்பு 200யை தொட்டது - வருண் சக்ரவர்த்தி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசிய கேகேஆர் வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. ...
-
என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் இந்த விருதை சமர்ப்பிக்க நினைக்கிறேன் - வருண் சக்ரவர்த்தி!
புதிதாய் பிறந்த என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் இந்த விருதை சமர்ப்பிக்க நினைக்கிறேன். ஐபிஎல் முடிந்த பிறகு குழந்தையைப் பார்ப்பேன் என்று வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிஎஸ்கேவின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்த கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சிஎஸ்கே அணியின் 11 வருட சாதனையையும் முறியடித்துள்ளது. ...
-
இப்படி ஒரு ஆட்டம் எங்கிருந்து வெளியில் வந்தது என்று எனக்கும் தெரியவில்லை - ஷர்துல் தாக்கூர்!
இளைஞர் சுயாஸ் மிகச் சிறப்பாக பந்து வீசினார். சுனில் மற்றும் வருணின் தரம் எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வருண்,நரைன்,சுயாஷ் சுழலில் வீழ்ந்தது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இந்திய அணியில் மீண்டும் கம்பேக்க் கொடுப்பேன் - வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை!
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கேகேஆர் பந்துவீச்சில் 115 ரன்களில் சுருண்டது ஹைதராபாத்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24