Wi vs sa 2nd test
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக், ஜோ ரூட், அட்கின்சன் அசத்தல்; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Related Cricket News on Wi vs sa 2nd test
-
ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். ...
-
சிராஜுடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கான காரணத்தை விளக்கிய டிராவிஸ் ஹெட்!
எனது விக்கெட்டினை வீழ்த்தியதும் நான், அவர் நன்றாக பந்துவீசியதாக கூறினேன். ஆனால், அவர் அதனை வேறு விதமாக எடுத்துக்கொண்டு என்னை பெவிலியனுக்கு செல்லுமாறு ஆக்ரோஷமாக சைகை செய்தார் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
SA vs SL, 2nd Test: மார்க்ரம், பவுமா அசத்தல்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய மிட்செல் ஸ்டார்க் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விக்கெட் வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Day-Night Test: டிராவிஸ் ஹெட் அபார சதம்; மீண்டும் பேட்டிங்கில் சொதப்பும் இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நினைக்கவில்லை - கஸ் அட்கின்சன்!
முதலில் நாங்கள் பேட்டர்களுக்கு ஷாட் பந்துகளை வீசி அதன்பின் யார்க்கர் வீச விரும்பினோம் என்று ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட 50+ அடித்த இங்கிலாந்தின் முதல் வீரர் மற்றும் உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். ...
-
Day-Night Test: லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் அரைசதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான பகளிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
ரபாடா பேட்டை இரண்டு துண்டாக உடைத்த லஹிரு குமாரா - வைரலாகும் காணொளி!
லஹிரு குமாரா வீசிய ஒரு பந்து காகிசோ ரபாடாவின் பெட்டை இரண்டு துண்டுகளாக உடைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ...
-
கபில்தேவ், ஜாகீர் கான் வரிசையில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் நடப்பு ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். ...
-
SA vs SL, 2nd Test: சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
Day-Night Test: நிதானம் காட்டும் ஆஸி; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24