Yo yo test
தோனியின் சாதனையை தகர்த்தார் டிம் சௌதீ!
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 315 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது . இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் துவக்கத்திலேயே ஹாரி ப்ரூக்ஸ் விக்கெட்டை இழந்தது. 186 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதம் பெறும் வாய்ப்பு இழந்தார் .
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று ஆடிய ஜோ ரூட் 153 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் . 435 ரன்கள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கான்வே,வில்லியம்சன் மற்றும் யங் ஆகியோர் ஆண்டர்சன் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். டாம் லேதம் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடினர்.
Related Cricket News on Yo yo test
-
NZ vs ENG, 2nd Test: மீண்டும் சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. ...
-
வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்த ஹாரி ப்ரூக்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் சதமடித்ததன் மூலம் வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: ப்ரூக், ரூட் சதம்; அதிரடி முனைப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 315 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: டாப் 10-ல் நீடிக்கும் ரோஹித், ரிஷப்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 7ஆம் இடத்தை தக்கவைத்துள்ளார்.. ...
-
ஐசிசி தரவரிசை: 40ஆவது வயதில் முதலிடத்தைப் பிடித்து ஆண்டர்சன் சாதனை!
சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்து சாதானைப் படைத்துள்ளார். ...
-
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் - ரோஹித் சர்மா பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டனர் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd Test: ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
IND vs AUS, 2nd Test: ஜடேஜா, அஸ்வின் அபாரம்; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியின் சர்ச்சை அவுட்; கவாஸ்கரின் விளக்கம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட் சரியானது தான் என மார்க் வாக் கூறிய நிலையில் சுனில் கவாஸ்கர் அதற்கு பதில் கொடுத்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd Test: இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்; அதிரடி காட்டும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ...
-
NZ vs ENG, 1st Test: மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட்; தோல்வியின் விழிம்பில் நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
சர்ச்சைகுள்ளான விராட் கோலியின் ஆட்டமிழப்பு; கடுப்பில் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: நாதன் லையன் சுழலில் திணறிய இந்தியா; காப்பாற்றுவாரா விராட் கோலி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24