எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணி பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற தனது கணிப்பை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக வழங்கவேண்டும். மேற்கொண்டு சாய் சுதர்ஷன் அல்லது தேவ்தத் படிகல் மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேற்கொண்டு இந்திய அணியின் 4ஆம் இடத்தில் ஷுப்மன் கில்லும், 5 மற்றும் 6 ஆம் இடங்களில் ரிஷப் பந்த் மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு 7ஆம் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவைத் தேர்ந்தெடுத்துள்ள அவர், 8ஆம் இடத்தில் ஷர்தூல் தாக்கூர் அல்லது தீபக் சஹாரை விளையாட வைக்க வேண்டும் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறிவுள்ளார்.

இறுதியில் அவர் இந்திய அணியின்  லெவனில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதில் முகமது ஷமி முழு உடற்தகுதியுடன் இல்லை என்றால் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறிவுள்ளார். மேலும் இவரது அணியில் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் மற்றும் கருண் நாயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணியின் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன்/தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்/தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது கிருஷ்ணா/பிரஷ்மித் ஷமி.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News