பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல் சேர்ப்பு?

Updated: Mon, Nov 04 2024 10:55 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது.

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்திய ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நள் பயிற்சி போட்டியிலும், ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளது.  இந்நிலையில் இத்தொடருக்கான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்றடைந்தது. 

அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையே மெக்காயில் நடைபெற்ற முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி 7விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனையடுத்து ஆஸ்திரேலியா ஏ மாற்றும் இந்தியா ஏ அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது எதிர்வரும் நவம்பர் 7ஆம் தேதி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய ஏ அணியில் நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த நிலையில், இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. 

 

மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதனால் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இருவரையும் இந்திய ஏ அணியில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன்மூலம் ஆஸ்திரேலிய தொடரின் போது இருவருக்கும் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை