இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட கூடிய 3 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இத்தொட்ரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட கூடிய 3 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஷுப்மான் கில்
இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் இந்திய அணியின் இளம் வீரரான ஷுப்மன் கில் தான். அவர் தற்போது நாட்டிற்காக மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார், மேலும் நீண்ட காலமாக அணியை வழிநடத்தும் திறனைக் கொண்டுள்ளார். மேற்கொண்டு அவ்ர் இந்திய அணியை 5 டி20 போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இது தவிர, ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸின் கேப்டனாகவும் உள்ளார். மேற்கொண்டு இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான தேர்விலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்பிரித் பும்ரா
இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடிப்பவர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான். 31 வயதான ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராகவும், 3 டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தையும் கொண்டுள்ளார். தற்போது ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். மேலும் இதுவரை இந்திய அணிக்காக 45 டெஸ்ட், 89 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தையும் அவர் கொண்டிருப்பதால், ரோஹித்தின் ஓய்வுக்குப் பிறகு, புதிய டெஸ்ட் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கேஎல் ராகுல்
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனைப் பற்றிப் பேசும்போது, 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியதுடன் இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்த கேஎல் ராகுலை நாம் மறக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், 33 வயதான கேஎல் ராகுல் இதற்கு முன் 12 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்திய அனுபவத்தையும் கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 58 டெஸ்ட், 85 ஒருநாள் மற்றும் 72 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தையும் கொண்டுள்ளதால் கேஎல் ராகுல் அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கான தேர்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now