2023
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12ஆம் தேதி டோமினிக்கா நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸ்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா தனது 10-ஆவது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
Related Cricket News on 2023
-
இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய உழைத்திருக்கிறேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்த உணர்வுபூர்வமான சதத்தை என்னுடைய பெற்றோரக்கு சமர்ப்பிக்கவும் விரும்புகிறேன் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
எம்எல்சி 2023: கான்வே, மில்லர் அரைசதம்; நைட் ரைடர்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அபார சதம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
முதல் போட்டியில் அரைசதம்; ஜாம்பவான்கள் பட்டியளில் ஜெய்ஸ்வால்!
அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் யஷஷ்வி ஜெய்ஸ்வால், சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் போன்ற ஜாம்பவான்களின் பட்டியலில் இடம்பிடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார். ...
-
WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அரைசதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் வின்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 146 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
எம்எல்சி 2023: போட்டி ஆட்டவணை; முதல் போட்டியில் சூப்பர் கிங்ஸ் - நைட் ரைடர்ஸ் மோதல்!
அமெரிக்காவில் தொடங்கப்படவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது சீசன் நாளை தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: ஆரஞ்சு & பர்பிள் தொப்பியை தட்டிச்சென்ற ஷாருக், அஜித்தேஷ்!
டிஎன்பிஎல் தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார். ...
-
எம்எல்சி 2023: ராயுடுவுக்கு மாற்றாக முன்னாள் வீரரைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்!
அமெரிக்காவில் தொடங்கியுள்ள மேஜர் லீக் தொடரில் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அம்பாதி ராயுடு திடீரென விலகிய நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் சிஎஸ்கே வீரரான இம்ரான் தாஹிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஜெய்ஸ்வாலிடமிருந்து ஸ்பெஷலான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் இருந்து ஸ்பெஷலான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
நான் மூன்றாம் இடத்தில் விளையாட விரும்பினேன் - ஷுப்மன் கில்!
அணி நிர்வாகம் என்னை எங்கு பேட்டிங் செய்ய விரும்புவதாக கேட்டார்கள். நான் நம்பர் மூன்றில் விளையாட விரும்புவதாக அவர்களிடம் கூறினேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ் 2023: ஆஸியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தோல்விகளில் இருந்து தான் எனது தவறுகளை திருத்திக் கொள்கிறேன் - ரவிச்சந்திர அஸ்வின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று யோசித்து மனரீதியாக தயாராக இருந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்த அஸ்வின்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது 33ஆவது ஐந்து விக்கெட்டுகளை பூர்த்தி செய்து ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
WI vs IND, 1st Test: அஸ்வின் அசத்தல்; யஷஸ்வி, ரோஹித் அதிரடி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24