2024
இந்தியாவில் தான் ஐபிஎல் தொடர் நடைபெறும் - அருண் துமால் உறுதி!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் துபாயில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. இதில் ஆச்சரியப்படும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் காம்மின்ஸ் ஆகியோர் உட்சபட்ச விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
அவர்களைத் தவிர்த்து நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முக்கிய வீரர்களும் பல்வேறு அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிலும் மிக முக்கியமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரு சீசன்கள் செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியதுடன் அந்த அணியின் புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது.
Related Cricket News on 2024
-
ரெஹான் அஹ்மதிற்கு கூடிய விரைவில் விசா கிடைத்துவிடும் - பென் ஸ்டோக்ஸ்!
மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே ரெஹானுக்கு விசா கிடைக்கும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
SL vs AFG, 3rd ODI: ரஹ்மத், ஒமர்ஸாய் அரைசதம்; இலங்கை அணிக்கு 267 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 267 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்!
டபிள்யூபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனில் விளையாடும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கவுள்ளது. ...
-
எப்போதும் போல் இதுவும் ஒரு போட்டி தான் - பென் ஸ்டோக்ஸ்!
ஒவ்வொரு டெஸ்டும் அடுத்த போட்டியைப் போல் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரையில் இதுவும் எனக்கு மேலும் ஒரு போட்டிதான் என 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக் கோப்பை தொடரை வைத்து பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்; ஐபிஎல் வீரர்களுக்கு செக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் இரு குழுக்களாக அனுப்படவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சௌரவ் கங்குலியுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒப்பிட்ட இர்ஃபான் பதான்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்ப்பதற்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியைப் பார்பது போல் உள்ளதாக முன்னள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். ...
-
இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளது - ஒல்லி போப்!
ராஜ்கோட் மைதானத்தில் புற்கள் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளதாக அந்த அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs WI, 3rd T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாட் கம்மின்ஸ் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் - சுனில் கவாஸ்கர்!
வரவுள்ள 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்படுவார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசை வழங்கிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, தனது சிறுவயது நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs WI, 3rd T20I: ரஸல், ரூதர்ஃபோர்ட் காட்டடி; ஆஸ்திரேலிய அணிக்கு 221 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை; விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஈசிபி!
விசா பிரச்சனையில் சிக்கிய இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹ்மதுவிற்கி உதவிய விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24