bangladesh cricket
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய வங்கதேசம்!
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது 262 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியானது 56 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வங்கதேச அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
Related Cricket News on bangladesh cricket
-
இந்த வெற்றி எங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
கடந்த சில நாள்களாகவே எங்கள் நாட்டு மக்கள் வெள்ளம் மற்றும் போராட்டங்கள் காரணமாக அவர்கள் பல சிரமங்களைச் சந்தித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரும் என்று வங்கதேச அணி கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றியானது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
கடந்த 10-15 நாட்களில், நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். இந்த வெற்றியானது எங்களின் அனைத்து வீரர்களையும் சாரும் என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சதமடித்து அசத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை யுஏஇ-க்கு மாற்றியது ஐசிசி!
வங்கதேசத்தில் நிலவிவரும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு நடைபெற இருந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இருந்து மஹ்முதுல் ஹசன் ஜாய் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் இருந்த மஹ்முதுல் ஹசன் ஜாய் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் மூத்த வீரராக அறியப்படும் முஷ்ஃபிக்கூர் ரஹீம் மேற்கொண்டு 32 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை எட்டும் இரண்டாவது வங்கதேச வீரர் எனும் சாதனையைப் படைப்பார். ...
-
டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் புறப்பட்ட வங்கதேச அணி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியானது இன்று பாகிஸ்தான் செல்லவுள்ளது. ...
-
PAK vs BAN: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு; அணியில் இணைந்த ஷாகிப் அல் ஹசன்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கபட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் - லிட்டன் தாஸ்!
போராட்டத்தில் தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான வதந்தி தவறானது என்று வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்ற ஐசிசி திட்டம்!
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய அணியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஷாகிப் அல் ஹசன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வங்கதேச அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு பதிலாக அறிமுக வீரர் தாவ்ஹித் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24