county cricket
இங்கிலாந்து கவுண்டி அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
தமிழக அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் விளையாடிய இவர் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக அறிமுகமாகி ரசிகர்களால் அறியப்பட்டவர். 2022-23 ஆண்டிற்கான விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எட்டு போட்டிகளில் விளையாடி 610 ரன்கள் குவித்தார். மேலும் அந்தப் போட்டி தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றார் . இதில் மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். பின் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 96 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 507 ரன்கள் குவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இவர் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் எடுத்தார்.
Related Cricket News on county cricket
-
கவுண்டி கிரிக்கெட்: இரட்டை சதமடித்து மாஸ் காட்டிய பிரித்வி ஷா; குவியும் பாராட்டு!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்கெதிரான அணிக்காக விளையாடிவரும் இந்திய வீரர் பிரித்வி ஷா இன்று நடைபெற்ற போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தினார். ...
-
கவுண்டி கிரிக்கெட்: சதமடித்து அசத்திய சட்டேஷ்வர் புஜாரா!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட்டாகிய பிரித்வி ஷா - வைரல் காணொளி!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பிரித்வி ஷா, ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கவுண்டி கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் பிரித்வி ஷா - வைரல் காணொலி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கவுண்டி கிரிக்கெட் 2022: லங்கஷையர் வெற்றிக்கு உதவிய வாஷிங்டன் சுந்தர்!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்கெதிரான போட்டியில் லங்கஷையர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
கவுண்டி கிரிக்கெட்: 400 ரன்களைக் கடந்து சாம் நார்த்தீஸ்ட் சாதனை!
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் கிளாமோர்கன் அணி சாம் நார்த்தீஸ்ட் 400 ரன்களை விளாசி சாதனைப் படைத்தார். ...
-
கவுண்டி கிரிக்கெட் 2022: அசத்தும் புஜாரா, வாஷிங்டன், சைனி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் புஜாரா இரட்டை சதமும், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் தங்களது அறிமுக போட்டிகளிலேயே 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். ...
-
கவுண்டி கிரிக்கெட்: கேப்டனான முதல் போட்டியிலேயே சதமடித்த புஜாரா!
மிடில்செஸ் அணிக்கெதிரான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சசெக்ஸ் அணியின் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
லெக் ஸ்பின்னராக மாறிய புஜாரா; வைரல் காணொளி!
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிவரும் இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா பந்துவீசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கவுன்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் வாஷிங்டன் சுந்தர்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தற்போது குணமாகிவிட்டதால் விரைவில் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட்: மீண்டும் இரட்டை சதம் விளாசி மிராட்டிய புஜாரா!
இந்திய டெஸ்ட் அணியில் இடத்தை இழந்த புஜாரா, கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி இந்திய டெஸ்ட் அணியின் கதவை தட்டிவருகிறார். ...
-
சதங்களில் மிரட்டும் புஜாரா; இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஸ்வான்!
இங்கிலாந்தில் நடந்து வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இ்ந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாராவும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும் சேர்ந்து பார்டனர்ஷிப் அமைத்து விளையாடியதை நெட்டிஸன்கள் புகழ்ந்து வருகிறார்கள். ...
-
ஒரே அணிக்காக விளையாடும் புஜாரா & ரிஸ்வான்!
இந்தியாவின் புஜாரா மற்றும் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனை இருநாட்டு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ...
-
சேட்டை மன்னன் ஜார்வோவிற்கு வாழ்நாள் தடை!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த ஜார்வோ எனும் ரசிகருக்கு, மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிப்பதாக யார்க்ஷையர் கவுண்டி கிளப் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47